Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் மின்சிகரெட்டுகளுக்குத் தடை

இந்திய அரசாங்கம் மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் மின்சிகரெட்டுகளுக்குத் தடை

படம்: AFP

இந்திய அரசாங்கம் மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

அதன்மூலம் இந்தியாவில் மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்யவோ, விற்கவோ, உற்பத்தி செய்யவோ கூடாது.

இளையர்களைக் கருத்திற்கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அந்த நடவடிக்கை மூலம் புகைப்பவர்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மையில் மின்சிகரெட்டு புகைத்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டுச் சிலர் மாண்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் மின்சிகரெட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்னர் நியூயார்க் நகரம் பல்வேறு சுவைகளில் வரும் மின்சிகரெட்டுகளைத் தடை செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்