Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா அடுத்த மாத இறுதிவரை அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தற்காலிகத் தடையை நீட்டிக்கும்

இந்தியாவில் நவம்பர் மாத இறுதிவரை அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தற்காலிகத் தடை நீடிக்கும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
இந்தியா அடுத்த மாத இறுதிவரை அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தற்காலிகத் தடையை நீட்டிக்கும்

(கோப்புப் படம்: Reuters)

இந்தியாவில் நவம்பர் மாத இறுதிவரை அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தற்காலிகத் தடை நீடிக்கும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் நிலைமையைப் பொறுத்து ஒருசில அனைத்துலக விமானப் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா கிருமிப்பரவலால் மார்ச் 23ஆம் தேதியிலிருந்து அனைத்துலக விமானப் பயணங்களை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.

ஆனாலும் 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் மே மாதத்திலிருந்து சிறப்புப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முற்றிலும் நிறுத்தப்பட்ட விமானப் பயணங்கள் மே 25ஆம் தேதி மீண்டும் தொடங்கின.

Air bubble எனும் கட்டுப்படுத்தப்பட்ட பயண ஏற்பாடுகளை 18 நாடுகளுடன் இந்தியா செய்துகொண்டுள்ளது.

அனைத்துலகச் சரக்கு விமானச் சேவை தற்காலிகத் தடையால் பாதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்