Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை இந்தியாவின் Amazon தளம் தடைசெய்துள்ளது

ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை இந்தியாவின் Amazon இணைய விற்பனைத் தளம் தடைசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை இந்தியாவின் Amazon தளம் தடைசெய்துள்ளது

(கோப்புப் படம்: REUTERS)

ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை இந்தியாவின் Amazon இணைய விற்பனைத் தளம் தடைசெய்துள்ளது.

பொட்டலங்களில் பொருள்கள் உடையாமல் இருப்பதற்குப் பயன்படுத்தப்படும் "bubble wrap" பிளாஸ்டிக் பொருளுக்குப் பதிலாகக் காகிதத்தில் செய்த காற்று நிறைந்த பொட்டலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது பயன்படுத்தப்படும் ஒட்டுவில்லை நாடாக்கள் மக்கிப்போகக் கூடியவையாக மாற்றப்பட்டுள்ளன.

ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் நீக்கியுள்ளதாய் நிறுவனம் கூறியது.

இதற்குமுன், நிறுவனம் விநியோகம் செய்த பில்லியன் கணக்கான பொட்டலங்களில் அளவுக்கு அதிகமாகப் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகக் குறைகூறப்பட்டது.

இந்தியாவில் முடக்கநிலை அறிவிக்கப்படும் முன்னரே நிறுவனம் அதன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்ததாகத் தெரிவித்தது.

2022ஆம் ஆண்டுக்குள் ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.

Amazon நிறுவனத்தின் போட்டியாளரான Flipkart நிறுவனமும் அதன் பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பாதியாகக் குறைத்துள்ளதாய்த் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்