Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Tik Tok உட்பட 59 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை

இந்திய அரசாங்கம், Tik Tok உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீனச் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. அவை நாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
Tik Tok உட்பட 59 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை

(படம்: AFP)

இந்திய அரசாங்கம், Tik Tok உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீனச் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. அவை நாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அத்தகைய செயலிகள், நாட்டின் அரசுரிமை, நீதியமைப்பு, ஒருமைப்பாடு, தற்காப்பு, மாநிலங்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.

பிரபலமான WeChat உட்பட, மொத்தம் 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்களின் தகவல்களை ரகசியமாகத் திருடி, பகிர்ந்து கொள்வதாகப் பல்வேறு புகார்கள் கிடைக்கப்பெற்றதால், சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்