Images
  • f
    (படம்: AFP/KARIM SAHIB)

இந்தியா: காலியாக உள்ள மருத்துவமனைப் படுக்கைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதில் குழப்பம்

இந்திய நகரங்கள் சிலவற்றில், கிருமித்தொற்றால் அவதியுறும் நோயாளிகள், காலியாக உள்ள மருத்துவமனைப் படுக்கைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில், கடும் குழப்பம் உருவாகியுள்ளது.

வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அலைவதால் ஏற்படும் தாமதம் காரணமாகச் சில நோயாளிகள் மாண்டுபோக நேர்கிறது.

ஒரு நகரிலுள்ள மருத்துவமனைகளில், காலியாக உள்ள படுக்கைகளைக் கண்காணிக்கும் பொதுவான கட்டமைப்பு இல்லாததால், அந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கிருமித்தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்பார்த்து, பெரிய மருத்துவமனைகள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் கூடுதலான படுக்கைகள் இருந்தாலும், அவை எங்கே உள்ளன என்னும் விவரம் தெரியாமல், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இதற்கிடையே, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் இன்று Amphan சூறாவளி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.  

Top