Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் கருப்புப் பூஞ்சைத் தொற்றால் இரு மாதங்களில் 45,000 பேருக்குப் பாதிப்பு

இந்தியாவில், கடந்த 2 மாதங்களில், கருப்புப் பூஞ்சைத் தொற்றால் 45,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் கருப்புப் பூஞ்சைத் தொற்றால் இரு மாதங்களில் 45,000 பேருக்குப் பாதிப்பு

(படம்: AFP

இந்தியாவில், கடந்த 2 மாதங்களில், கருப்புப் பூஞ்சைத் தொற்றால் 45,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக அது ஓர் அரிய வகைத் தொற்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் COVID-19 நோய்ப்பரவல் காரணமாகப் அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாகக், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தோர், அவ்வகைத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொப்புளங்கள், வீக்கம், புண்கள் ஏற்படுவதுண்டு.

பூஞ்சை நோயாளியின் மூளைக்குப் பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால், அதைத் தடுக்க, கண்கள், தாடை, மூக்கு ஆகியவற்றை அகற்ற நேரிடும்.

கருப்புப் பூஞ்சைக்குப் பலியாகும் வாய்ப்பு 50 விழுக்காட்டுக்கும் அதிகம்.

இதுவரை ஆக அதிகமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 9,000 பேர் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்ப்பரவல் சூழலுக்கு முன்பாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 20 பேர் மட்டுமே அத்தகைய தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்