Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியத் தலைநகர் புதுடில்லியில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், மாண்டவர்களின் எண்ணிக்கை 9க்கு அதிகரித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இந்தியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(படம்: Prakash SINGH / AFP)

புதுடில்லி: இந்தியத் தலைநகர் புதுடில்லியில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், மாண்டவர்களின் எண்ணிக்கை 9க்கு அதிகரித்துள்ளது.

அந்தக் கட்டடம் அருகிலிருந்த மற்றொரு கட்டடத்தின்மீது விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டது.

12க்கும் அதிகமானோர் கட்டடத்தினுள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

அவர்களைக் காப்பாற்ற, மீட்புப் பணியாளர்கள் அயராது போராடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

கான்கிரிட், உலோகம் ஆகியவற்றை வெட்டி அகற்றி மீட்கவேண்டியுள்ளது.

(படம்: Prakash SINGH / AFP)

கட்டடம் இடிந்துவிழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியக் காவல்துறை அதிகாரிகள் 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

4 பேரில் ஒருவர் அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் எனக் கூறப்பட்டது.

அண்மை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் குறைந்த செலவில் கட்டப்பட்டு வந்துள்ளன.

கட்டுமானத்திற்கு மலிவான பொருட்கள் பயன்படுத்தப்படுவது மற்றொரு காரணம்.

இந்தியாவில் கட்டடங்கள் இடிந்து விழுவது புதிதல்ல. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் கட்டட இடிபாடுகள் அங்கு அதிகம்.

இப்போதைய இடிபாட்டுக்கும் அண்மையில் பெய்த கனத்த மழைக்கும் தொடர்புள்ளதா எனத் தெளிவாகத் தெரியவில்லை.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்