Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டியது

இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டியது

வாசிப்புநேரம் -

இந்தியாவில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 357,229 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 3,449 பேர் மாண்டனர்.

இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த ஜூலையில் முதல் மில்லியனைத் தொட்டது.

அடுத்த இரண்டு மாதங்களில் அந்த எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்தது.

அதை அடுத்து புதிதாய்ப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், கிருமித்தொற்று உச்சத்தை எட்டிவிட்டதாய் இந்தியச் சுகாதார அமைச்சு அறிவித்தது.

ஆனால், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.

சிகிச்சைக்குத் தேவையான உயிர்வாயுக் கலன்கள் போதிய அளவில் இல்லாதது, படுக்கைகளுக்கான பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் நிலவுகின்றன.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த, 11 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.

இந்தியாவில், தேசிய அளவில் முடக்கம் அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் அதிகரித்துள்ள போதும், அதை நடைமுறைப்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி தயக்கம் காட்டி வருகிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்