Images
  • f
    (படம்: AFP / XAVIER GALIANA)

COVID-19: இந்தியாவில் மேலும் 17,000 பேருக்குக் கிருமித்தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாகச் சுமார் 17ஆயிரம் பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நேற்று 400க்கும் அதிகமானோர் மாண்டனர்.

அவர்களையும் சேர்த்து அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 473,000-ஐக் கடந்துவிட்டது.

கிட்டத்தட்ட 15,000 பேர் மாண்டுவிட்டனர்.

தலைநகர் புதுடில்லி ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத்துறை திணறிவருகிறது.

உலக அளவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது நாலாவது இடத்தில் உள்ளது.

அடுத்த மாதத்துக்குள் ரஷ்யாவை முந்திச் சென்று அது மூன்றாவது இடத்தை அடையக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 

Top