Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: இரண்டாவது நாளாக 7,000-க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: இரண்டாவது நாளாக 7,000-க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று

(படம்: NOAH SEELAM / AFP)

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் புதிதாகச் சுமார் எண்ணாயிரம் பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம்காணப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 174,000 ஆனது.

மகாராஷ்டிர மாநிலம் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகமாகப் பதிவாகிவருகிறது.

டில்லி, ஹரியானா, உத்தராகண்ட், தமிழ்நாடு ஆகியவையும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முடக்கநிலை எந்த அளவு தளர்த்தப்படும் என்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்