Images
  • india covid (1)
    (படம்: AFP)

இந்தியாவில், கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது

இந்தியாவில் பதிவான கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, அரை மில்லியனைத் தாண்டியுள்ளது.

அங்கு, ஒரே நாளில் மேலும் 18,500-பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

மேலும் 385 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களையும் சேர்த்து, மாண்டோர் எண்ணிக்கை 15,685-க்கு அதிகரித்தது.

இருப்பினும் இந்தியாவில், அடுத்த சில வாரங்களில் கிருமிப் பரவல் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கவில்லை என்று நிபுணர்கள் கூறினர்.

அடுத்தமாத இறுதிக்குள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு மில்லியனைத் தாண்டலாம் என்றும் நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.

பொருளியல் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில், சில மாநில அரசாங்கங்கள் புதிய முடக்க நடவடிக்கைகளை அறிமுகம் செய்ய விரும்புகின்றன.

அமெரிக்கா, பிரேஸில், ரஷ்யா, ஆகிய நாடுகளுக்கு அடுத்து, ஆக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா உள்ளது. 

Top