Images
  • india flag
    (படம்: AFP)

நிலவின் மேற்பரப்பை ஆராய ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இந்தியா

இந்தியா வரும் திங்கட்கிழமை, நிலவின் மேற்பரப்பை ஆராய இரண்டாவது முறையாக, Chandra-yaan-2 எனும் ஆளில்லா விண்கலத்தை அனுப்பவிருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட Chandra-yaan-1 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து அது இரண்டாவது முயற்சியில் இறங்கியுள்ளது.

Chandra-yaan-2, நிலவைச் சுற்றிவருதல், அங்கு தரையிறங்குதல், அதில் உலவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்ட சுமார் 3 வாரங்களில் அது நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம் வெற்றிபெற்றால், நிலவுக்கு ஆய்வு மேற்கொள்ளும் விண்கலத்தை அனுப்பிய 4ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவைச் சாரும்.

இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை அந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளன.

Top