Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தியாவில் Bharat Biotech தடுப்பூசியைப் பிள்ளைகளுக்கு நெருக்கடிக்காலத்தின்போது பயன்படுத்த பரிந்துரை

COVID-19: இந்தியாவில் Bharat Biotech தடுப்பூசியைப் பிள்ளைகளுக்கு நெருக்கடிக்காலத்தின்போது பயன்படுத்த பரிந்துரை

வாசிப்புநேரம் -
COVID-19: இந்தியாவில் Bharat Biotech தடுப்பூசியைப் பிள்ளைகளுக்கு நெருக்கடிக்காலத்தின்போது பயன்படுத்த பரிந்துரை

படம்: REUTERS

இந்தியாவில் Bharat Biotech தடுப்பூசியைப் பிள்ளைகளுக்கு நெருக்கடிக்காலத்தின்போது பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 12 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும்.

இந்தியாவில் அத்தகைய தடுப்பூசியைப் போடுவதற்கு ஒப்புதல் பெற்றுள்ள முதல் நிறுவனம் Bharat Biotech.

2 வயதிலிருந்து 18 வயதுக்குள் இருப்போரிடையே நடத்தப்பட்ட பரிசோதனைகளின் தரவுகளைக் கொண்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 950 மில்லியனுக்கும் அதிகமான முறை COVID-19 தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.

தற்போது பிள்ளைகளுக்கும்
தடுப்பூசி போடுவதில் அந்நாடு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

தனது தடுப்பு மருந்தை மற்ற நாடுகளிலும் நெருக்கடிக்காலத்தின்போது பயன்படுத்துவதற்கான ஒப்புதலை உலகச் சுகாதார நிறுவனத்திடமிருந்து பெறவும் Bharat Biotech முயற்சி மேற்கொள்கிறது.

அதுகுறித்து உலகச் சுகாதார நிறுவனம் இம்மாத இறுதியில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-Reuters/nh 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்