Images
  • cinemas
    (படம்: REUTERS/Amit Dave)

இந்தியாவில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்... படம் பார்க்க ரசிகர்கள் செல்வார்களா?

இந்தியாவில் கிருமிப்பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.

திரையரங்குகளை மீண்டும் திறப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதலாகச் செலவு செய்வர் என்றும், அது அங்கு தத்தளிக்கும் திரைப்படத் துறைக்கு உதவும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆனால், பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவதால், திரையரங்குகளுக்குச் செல்ல பலரும் தயங்குகின்றனர்.

எதிர்பார்க்கும் திரைப்படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பதாலும், திரையரங்குகளுக்குச் செல்வதை ஒத்திவைக்கப் பலரும் முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

Top