Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.85 மில்லியனைத் தாண்டியது

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4.85 மில்லியனைத் தாண்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -
இந்தியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.85 மில்லியனைத் தாண்டியது

படம்: AFP / Sajjad HUSSAIN

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4.85 மில்லியனைத் தாண்டியுள்ளது.

புதிதாகச் சுமார் 92,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதாக இந்தியாவின் மத்தியச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா தான் கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு.

கடந்த 24 மணிநேரத்தில் 1,100க்கும் அதிகமானோர் அங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 79,000-ஐக் கடந்துவிட்டது.

மூத்தோர், வேலையிடங்களில் எளிதில் பாதிக்கப்படுவோர் ஆகியோருக்கு COVID-19 தடுப்பு மருந்தைத் தர, நெருக்கடிநேர அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்