Images
  • india (1)
    படம்: AFP

கிருமித்தொற்றுக்கு இடையே கடுமையான கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானச் சேவைகளைத் தொடங்கும் இந்தியா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் , சுமார் 6,000 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் நாடளாவிய முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. அதனையடுத்து, சில உள்நாட்டு விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க இந்தியா தயாராகிவருகிறது.

சுமார் மூன்றில் ஒரு பங்கு உள்நாட்டு விமானச் சேவைகள் வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளன.

ஆனால் அவை கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். தற்போதுள்ள நிலையில், விமானச்சேவைகளுக்கு உள்ள உலகின் ஆகக் கடுமையான விதிமுறைகள் அவை என்று கூறப்படுகிறது.

1.3 பில்லியன் மக்கட்தொகை கொண்ட இந்தியாவில் மொத்தம், 118,000 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களில் 3,500க்கும் அதிகமானோர் மாண்டனர்.

இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி தொடங்கிய முடக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதிவரை நீட்டித்திருக்கிறார்.

ஆனால் கிருமிப்பரவல் அதிகம் இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கங்கள் அதன் தொடர்பில் தனிப்பட்ட வழிகாட்டிகளை மக்களுக்கு அமைத்துக்கொடுக்கலாம் என்றும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

Top