Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா COVAX திட்டத்திற்கான தடுப்புமருந்து ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்கியது

இந்தியா COVAX திட்டத்திற்கான தடுப்புமருந்து ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்கியது

வாசிப்புநேரம் -

இந்தியா COVAX திட்டத்திற்கான தடுப்புமருந்து ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

COVID-19 தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக உலகச் சுகாதார நிறுவனம் தொடங்கிய திட்டம் COVAX.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டில் COVID-19 தடுப்பு மருந்துகளுக்கு அதிகத் தேவை இருந்ததால் அது COVID-19 தடுப்பு மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்தியது.

அடுத்த ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரிக்கவிருப்பதாகத் தடுப்புமருந்து உற்பத்தி செய்யும் Serum Institute of India நிறுவனம் தெரிவித்தது.

COVID-19 தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பெரும் நிறுவனங்களில் Serum Institute of India-வும் ஒன்று.

அது இதுவரை 1 பில்லியனுக்கும் அதிகமான முறை போடத் தேவையான AstraZeneca தடுப்புமருந்தைத் தயாரித்துள்ளது.

COVAX திட்டத்திற்கு 550 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்புமருந்தைக் கொடுக்க Serum Institute of India ஒப்பந்தம் செய்துள்ளது.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்