Images
  • India
    படம்: AFP / Sajjad HUSSAIN

இந்தியா: நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்குகிறது

இந்தியாவில் இன்று புதிதாக 83,809 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது.

இன்று மேலும் 1,054 பேர் நோய்த்தொற்றால் மாண்டனர்.

உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் தற்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்குகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 4.93 மில்லியன் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மாண்டோர் மொத்த எண்ணிக்கை 80,000-க்கும் மேல்.

உலக அளவில் நோய்த்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.

Top