Images
  • india (3)
    (படம்: AFP / Noah SEELAM)

COVID-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.2 மில்லியனைக் கடந்தது

இந்தியாவில் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7.2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

கிருமித்தொற்றால் அங்கு 110,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.

கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் நிலவரம் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இருப்பினும், கூடுதலான பொருளியல் நடவடிக்கைகள் அங்கு மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் நேற்றுப் புதிதாக 63,500க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியானது; சுமார் 730 பேர் மாண்டனர்.

Top