Images
  • india covid (3)
    (கோப்புப் படம்: AP/Bikas Das)

COVID-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.5 மில்லியனை நெருங்கியது

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைத் தற்போது 7.5 மில்லியனை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 61,871 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாண்டோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் 1,14,031 பேர் மாண்டனர்.

இருப்பினும் அங்கு நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுவரை சுமார் 6.6 மில்லியன் பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர். 

இன்னும் 700,000-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் நிலவரம் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் COVID-19 நோய்த்தொற்றால் ஆக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

Top