Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் எதிர்ப்புசக்தியை மீறிச் செயல்படக்கூடிய கொரோனா கிருமி உருமாற்றம் அடையாளம் காணப்பட்டுள்ளது

இந்தியாவின் அறிவியல் நிபுணர்கள், எதிர்ப்புசக்தியை மீறி செயல்படக்கூடிய வகையில் கொரோனா கிருமி உருமாறியிருப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் அறிவியல் நிபுணர்கள், எதிர்ப்புசக்தியை மீறி செயல்படக்கூடிய வகையில் கொரோனா கிருமி உருமாறியிருப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

அதுகுறித்து பீதியடையத் தேவையில்லை என்றும் உருமாறிய கிருமி குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 400,000க்கும் அதிகமானோரிடம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் இத்தனை அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இதுவரை ஒரே நாளில் பதிவானதில்லை.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன.

எனினும், தடுப்பூசிப் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி நிலையங்களை மூடிவிட்டன.

புது டில்லியில் நாளை முடிவடையவிருந்த முடக்கநிலை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்