Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தியாவின் தடுப்பூசிச் சோதனைகள் 2 மாதங்களுக்குள் முடிவுக்கு வரக்கூடும்

இந்தியாவில் தயாரிக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் இறுதிக்கட்டச் சோதனைகள் இன்னும் 2 மாதங்களுக்குள் முடிவுக்கு வரக்கூடும் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

வாசிப்புநேரம் -

இந்தியாவில் தயாரிக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் இறுதிக்கட்டச் சோதனைகள் இன்னும் 2 மாதங்களுக்குள் முடிவுக்கு வரக்கூடும் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியச் சுகாதார அமைப்புடன் இணைந்து பாரத் மருத்துவச் சோதனை நிறுவனம் தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது.

சுமார் 26,000 பேரிடம் அந்தத் தடுப்பூசி சோதனை செய்யப்படும்.

சோதனை வெற்றிகரமாக முடிந்தால் ஜூலை மாதத்திற்குள் சுமார் 250 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

COVID-19க்கு எதிரான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதில் பல நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. சிலவற்றின் சோதனைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனால் தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் நோய்த்தொற்றில் இரண்டாம் நிலையில் உள்ள இந்தியாவில் தற்போது 9 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்