Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: அதிக அளவில் COVID-19 பரிசோதனை குறைந்திருப்பது குறித்து அதிகாரிகள் கவலை

இந்தியாவில் அபாயமான அளவு, COVID-19 பரிசோதனை குறைந்திருப்பது பற்றி அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். 

வாசிப்புநேரம் -
இந்தியா: அதிக அளவில் COVID-19 பரிசோதனை குறைந்திருப்பது குறித்து அதிகாரிகள் கவலை

(கோப்புப் படம்: AFP/Sam Panthaky)

இந்தியாவில் அபாயமான அளவு, COVID-19 பரிசோதனை குறைந்திருப்பது பற்றி அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.

குறைந்த அளவே பரிசோதனை செய்யப்படுவதால், கிருமிப்பரவலை முறியடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பயனின்றிப் போகலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் ஓராண்டுக்குப் பிறகு, முதன்முறை புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஆனால், அது முழுமையான நிலவரத்தை எடுத்துக்காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக நாள்தோறும் ஒரு மில்லியனுக்கு மேல் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால், அது பரிசோதனை செய்யும் மொத்த அளவில் பாதிக்கும் குறைவு.

நாடு முழுவதும் கிருமிப்பரவலின் உண்மை நிலவரத்தைத் தீர்மானிப்பதை அது சிரமமாக்குவதாக இந்திய சுகாதார அமைச்சு கூறியது.

மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, 11 மாநிலங்களும், இரண்டு யூனியன் பிரதேசங்களும் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்