Images
  • india covid (8)
    படம்: AFP / Money SHARMA

இந்தியாவில் 4.7 மில்லியன் பேர் வரை கிருமித்தொற்றால் மாண்டு போயிருக்கலாம் - அமெரிக்க ஆய்வு

இந்தியாவில் 4.7 மில்லியன் பேர் வரை கிருமித்தொற்றால் மாண்டு போயிருக்கலாம் என்று அமெரிக்காவில் உள்ள ஓர் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை, அதிகாரபூர்வப் புள்ளிவிவரத்தை விட, பத்து மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்று அந்தக் குழு கூறியது.

கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு ஜூன் வரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக குழு சொன்னது.

இந்தியாவில் நாள்தோறும் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று இந்தியாவில் 30,093 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.  

Top