Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2 மில்லியனுக்கு உயர்ந்தது

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2 மில்லியனுக்கு உயர்ந்தது

(படம்: AFP / Prakash SINGH)

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

இருபதே நாள்களில், கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 1 மில்லியன் அதிகரித்தது.

கிருமித்தொற்றில் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, பிரேசிலைக் காட்டிலும் குறுகிய காலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, அங்கு அதிகரித்துள்ளது.

நோய்த்தொற்றுக்கான சோதனை வெகுவாக அதிகரித்துள்ளபோதும், ஒரு சில மாநிலங்களில் நிலைமை வேறுபடுகிறது.

இந்தியாவில், மரண எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கிருமித்தொற்று அதிகரித்துவரும் நிலையிலும், சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டு வருகின்றன.

மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வட்டாரங்கள், நகரங்கள் சிலவற்றில் அவ்வப்போது முடக்கநிலை அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் 2 மில்லியனுக்கு அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு, 62,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.

மாண்டோர் எண்ணிக்கை 40,700ஆக உள்ளது. இருப்பினும், மரண எண்ணிக்கை முறையாகக் கணக்கிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டை, அரசாங்கம் எதிர்நோக்குகிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிருமித்தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அது மூன்றாம் இடத்தில் உள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்