Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் மோசமாகும் கிருமிப்பரவல் - ஓரிரவில் 53,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள்

இந்தியாவில் கிருமிப்பரவல் சூழல் மோசமாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் மோசமாகும் கிருமிப்பரவல் - ஓரிரவில் 53,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள்

(கோப்புப் படம்: REUTERS/Niharika Kulkarni)

இந்தியாவில் கிருமிப்பரவல் சூழல் மோசமாகியுள்ளது.

நேற்றிரவு 53,476 COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியதாக இந்தியச் சுகாதார அமைச்சு வெளியிட்ட விவரங்கள் காட்டின.

அதுவே சென்ற அக்டோபர் 23 ஆம் தேதியிலிருந்து பதிவான ஆக அதிகமான தினசரி கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை.

இந்தியாவில் இதுவரை 11.8 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவான நாடாக இந்தியா 3ஆம் நிலையில் உள்ளது.

அங்கு நேற்று மேலும் 251 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். இந்தியாவில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 160,692.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்