Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் 45 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள்

இந்தியாவில் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் 45 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள்

வாசிப்புநேரம் -

இந்தியாவில், புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் 45 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில், குழந்தைகளும் அடங்குவர்.

மேலும் நோயாளிகளின் நுரையீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகளை பாதிக்கும் அளவுக்குக் கிருமித்தொற்று கடுமையாகி வருவதாக அதிகாரிகள் கூறினர்.

புதிதாகப் பரவி வரும் கிருமி வகை, இளையர்களை எளிதில் தாக்கக்கூடிய இயல்பு உள்ளதாக இருக்கக் கூடுமென அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆனால், அதை உறுதி செய்வதற்கு இன்னும் அதிகமான தகவல்கள் தேவைப்படுவதாகச் சுகாதாரத் துறை வல்லுநர்கள் கூறினர்.

நேற்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 1,500-க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்