Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 4 மாதங்களில் இல்லாத அளவு குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

இந்தியாவில் 4 மாதங்களில் இல்லாத அளவுக்குப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

வாசிப்புநேரம் -
இந்தியா: 4 மாதங்களில் இல்லாத அளவு குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

படம்: AFP / Jewel SAMAD

இந்தியாவில் 4 மாதங்களில் இல்லாத அளவுக்குப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,163 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அங்கு மொத்தம் 8.87 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை கடந்த சில நாட்களாகக் கணிசமாகக் குறைந்துவருகிறது.

வாரயிறுதியில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கிருமித்தொற்றால் 449 பேர் மாண்டனர்.

மாண்டோர் மொத்த எண்ணிக்கை 130,519ஆகப் பதிவானது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்