Images
  • india covid (8)
    (படம்: Reuters/Niharika Kulkarni)

COVID-19 நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இல்லை : இந்தியா

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை மில்லியன் கணக்காக இருக்கலாம் என்று கூறப்படுவதைப் புதுடில்லி நிராகரித்துள்ளது.

இருப்பினும் பல மாநிலங்கள் தங்கள் தகவல்களைத் தற்போது மீண்டும் சரிசெய்து வருவதாக
இந்தியா ஒப்புக்கொண்டது.

அமெரிக்க ஆய்வுக்குழு ஒன்று இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு கருத்தாய்வை நடத்தியது.

அது இந்தியாவில் மாண்டோர் எண்ணிக்கை 3.4 மில்லியனுக்கும் 4.7 மில்லியனுக்கும் இடையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்தியாவின் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் நோய்த்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

COVID-19 நோய்த்தொற்றால் சுமார் 15,000 பேர் அங்கு மாண்டனர்.  

Top