Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒமக்ரான் அபாயம் - அனைத்துலகப் பயணிகளுக்கான விதிகளைக் கடுமையாக்கும் இந்தியா

ஒமக்ரான் அபாயம் - அனைத்துலகப் பயணிகளுக்கான விதிகளைக் கடுமையாக்கும் இந்தியா

வாசிப்புநேரம் -

ஒமக்ரான் கிருமிப்பரவல் அபாயத்தால், இந்தியாவிற்குள் நுழையும் அனைத்துலகப் பயணிகளுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர், ஹாங்காங், பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்டவற்றை "அபாயமிக்க" நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது இந்தியா.

அந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியா சென்றதும், PCR பரிசோதனை செய்து, முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தில் காத்திருக்கவேண்டும்.

நோய் இல்லையெனில், ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொண்டு, எட்டாவது நாள் மீண்டும் சோதனை மேற்கொள்ளவேண்டும். பின் மீண்டும் ஒரு வாரம் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நோய் அறிகுறிகள் தென்பட்டாலோ, பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அரசாங்க மருத்துவ வசதிகளுக்கு அனுப்பப்படுவர்.

அவர்களுடன் தொடர்புடையவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அரசாங்க அதிகாரிகளால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர்.

'அபாயமிக்க நாடுகள்' பட்டியலில் இல்லாத நாடுகளைச் சேர்ந்தோர், PCR பரிசோதனை ஆதாரங்களைச் சமர்ப்பித்து, 14 நாள் தங்கள் உடல்நிலையை கண்காணித்துக் கொண்டால் போதும்.

நாளை மறுநாளிலிருந்து (டிசம்பர் 1) புதிய விதிமுறைகள் நடப்புக்கு வரும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்