Images
  • india covid (1)
    (படம்: AFP)

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,500க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அங்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த வாரத்திலிருந்தே அங்கு ஒவ்வொரு நாளும்
4,500க்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளானது உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசாங்கம் முடக்கநிலையைத் தற்காத்துப் பேசியுள்ளது. இல்லாவிட்டால் மாண்டோர் எண்ணிக்கை அதிகமாயிருந்திருக்கும் என்று அது கூறியது.

கிருமிப்பரவலை மெதுவடையச் செய்யவும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடக்கநிலை உதவியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்வேளையில், COVID-19 கிருமித்தொற்றைத் தடுக்க மலேரியா சிகிச்சைக்குப் பயன்படும் hydroxy-chloroquine மருந்தை யாருக்கெல்லாம் தரலாம் என்பதற்கான பட்டியலை இந்திய அரசாங்கம் மறுஆய்வு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Top