Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் கிருமித்தொற்றால், இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,023 பேர் மரணம்

இந்தியாவில், கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,023 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் கிருமித்தொற்றால், இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,023 பேர் மரணம்

(கோப்புப் படம்: REUTERS/Anushree Fadnavis)

இந்தியாவில், கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,023 பேர் மாண்டனர்.

அதைத் தொடர்ந்து, நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 182,553ஆக உயர்ந்தது.

24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 295,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இந்தியச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா, மீண்டும் ஒரு பெரிய போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக, நேற்று இரவு (ஏப்ரல் 20) பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நிலைமை, சில வாரங்களுக்கு முன்புவரை கட்டுக்குள் இருந்ததாகவும், 2ஆம் கட்டக் கிருமிப்பரவல் புயல் போல் தாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அண்மை வாரங்களில், கும்பமேளா சமய விழா, அரசியல் பிரசாரங்கள், திருமணங்கள், கிரிக்கெட் போட்டிகள் எனப் பெரிய அளவில் கூட்டம் கூடியது.

இதற்கிடையில், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான முக்கிய மருந்துகளின் தயாரிப்பு மெதுவடைந்துள்ளது.

சில தொழிற்சாலைகளில் அவற்றின் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனால், மக்கள் மருத்துகளையும் உயிர்வாயுக் கலன்களையும் சட்டவிரோதமாக, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

- Agencies/vc 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்