Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 100,000 பேருக்குக் கிருமித்தொற்று

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் சுமார் 103,000-க்கும் அதிகமானோருக்கு COVID-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 100,000 பேருக்குக் கிருமித்தொற்று

படம்: REUTERS

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் சுமார் 103,000-க்கும் அதிகமானோருக்கு COVID-19
நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், அமெரிக்காவில் மட்டும்தான் ஒரேநாளில் 100,000-க்கும் மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், இந்தியாவில் நோய்த்தொற்று கட்டுக்குள் இருந்தது.

ஆனால், அதன் பிறகு கொரோனா கிருமி கட்டுக்கடங்காமல் பரவத்தொடங்கியது.

மக்கள், பெரிய அளவில் கூட்டமாகக் கூடுவது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாமல் இருந்தது-போன்றவை நோய்ப்பரவலைக் கடுமையாக்கியது.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில், கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்துவருகிறது.

ஒரே நாளில் அங்கு 57,074 பேரிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

தற்போது அங்கு, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பதிவான நோய்த்தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 12.6 மில்லியன்.

165,000-க்கும் அதிகமானோர் மாண்டனர்.

இருப்பினும், உலக அளவில் பார்க்கும்போது மக்கள்தொகை அடிப்படையில் அது குறைவான விகிதம்தான் என்று நிபுணர்கள் கூறினர்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்