Images
  • india covid (5)
    (படம்: Reuters)

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 400,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

உலகிலேயே முதன்முறையாக, இந்தியாவில், 24 மணி நேரத்தில் 400,000க்கும் அதிகமான புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதை அடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19.1 மில்லியனாக அதிகரித்தது.

மேலும் சுமார் 3,500 பேர் மாண்டனர்.

நோய்த்தொற்றால் மாண்டோரின் மொத்த எண்ணிக்கை, ஏறத்தாழ 211,850ஆக உயர்ந்தது.

எனினும், போதுமான அளவு COVID-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததாலும், மரணத்திற்கான காரணத்தைத் தவறாகப் பதிவு செய்வதினாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர், மாண்டோரின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், நோய்த்தொற்றுச் சம்பவங்களின் அன்றாட எண்ணிக்கை 10,000க்கும் கீழ் குறைந்ததை அடுத்து, பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இருப்பினும் மார்ச் மாத இறுதியில், கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது.

ஆனால் அதன் பின்னரும், மில்லியன் கணக்கானோர் கலந்துகொண்ட கும்பமேளா சமய நிகழ்ச்சி, தேர்தல் பிரசாரங்கள்-ஆகியவை தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்பட்டன.

சென்ற மாதத்தில் மட்டும், இந்தியாவில் சுமார் 7 மில்லியன் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

- AFP/CNA/zl

Top