Images
  • India
    படம்: AFP / Jewel SAMAD

COVID-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது

இந்தியாவில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியுள்ளது.

கடந்த 11 நாட்களில் அங்கு மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் தொண்ணூறாயிரத்து 123 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 1,290 பேர் மாண்டனர்.

இந்தியா முழுவதும் நோய்ப்பரவலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82ஆயிரத்தைக் கடந்தது.

நாள்தோறும் அங்கு சுமார் ஒரு மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்றுச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவை போதுமானதல்ல, உண்மையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்குமென்று வல்லுநர்கள் கருதுகின்றனர். 

Top