Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தியாவில் தணியத் தொடங்கியுள்ள கிருமிப்பரவல்

COVID-19: இந்தியாவில் தணியத் தொடங்கியுள்ள கிருமிப்பரவல்

வாசிப்புநேரம் -
COVID-19: இந்தியாவில் தணியத் தொடங்கியுள்ள கிருமிப்பரவல்

(படம்: REUTERS/Niharika Kulkarni)

இந்தியாவில் இன்று புதிதாக 48,648 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் 563 பேர் மாண்டனர்

தற்போது அங்கு சுமார் 8.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாள்களாக இந்தியாவில் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி அங்கு, கிருமித்தொற்றால் மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 121,000-க்கும் அதிகம்.

இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதையொட்டி, மக்கள் அதிக அளவில் வெளிவரக்கூடும் என்பதால் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

உலகில் நோய்த்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 9 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்