Images
  • India Cyclone (1)
    (படம்: AFP/Asit Kumar)

இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் வீசிய திட்லி சூறாவளி

இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன்று (அக்டாபர் 11) வீசிய திட்லி (Titli) சூறாவளியால் இருவர் மாண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளிலிருந்து சுமார் 300,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


அவர்கள் தங்குவதற்குத் தற்காலிகமாக 1,100 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றோடு பெய்த கனத்த மழை, ஒடிஷா மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.


மரங்கள், மண்ணிலிருந்து வேரோடு சாய்ந்தன.

மின்சார, தொலைத்தொடர்புக் கம்பங்கள் துண்டிக்கப்பட்டதால்
மின்சார விநியோகம் தடைப்பட்டதாகக் கூறப்பட்டது.

   

Top