Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் பொது இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

இந்தியாவில், பொது இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் பொது இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

(படம்: RS Iyer/AP)

இந்தியாவில், பொது இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக அறிவித்துள்ளார்.

அதனை ஒரு முக்கிய மைல்கல் என்றும் அவர் வருணித்தார்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அதன் தொடர்பில், பிரதமர் மோடி அதனை அறிவித்தார்.

திரு மோடியின் அறிவிப்பு குறித்து வல்லுநர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இன்றும் பல மில்லியன் மக்களுக்குக் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதை அவர்கள் சுட்டினர்.

2014ஆம் ஆண்டு பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, அனைவருக்கும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் எனும் பெரும் வாக்குறுதியைத் திரு மோடி முன்வைத்திருந்தார்.

அடுத்து அவர், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்ட்டிக் பொருள்களை முற்றிலும் நீக்க திட்டம் கொண்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்