Images
  • India building
    படம்: REUTERS

இந்தியா: சுற்றுச்சூழல் விதிக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட இரண்டு சொகுசுக் கட்டடங்கள் இடிக்கப்பட்டன

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட இரண்டு சொகுசுக் கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

H2O Holy Faith, Alfa Serene ஆகிய கட்டடங்கள் இடிக்கப்பட்டதை நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வேடிக்கை பார்த்தனர்.

விதிகளை மீறிக் கட்டப்பட்ட அந்தக் கட்டடங்கள் சில நொடிகளில் தரைமட்டமாயின.

கடலோரப் பாதுகாப்பு விதிக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட அந்த சொகுசுக் கட்டடங்களை இடிக்க இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

அந்தக் கட்டடத்தில் 343 வீடுகள் இருந்ததாகவும் அதில் 2000க்கும் அதிகமானோர் குடியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியிருப்பாளர்களுக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக 35,000 டாலர் கொடுக்கப்படவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.


Top