Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒலிம்பிக் போட்டி: சீன நிறுவனத்தின் ஆதரவிலான விளையாட்டு உடையை இந்திய வீரர்கள் அணியமாட்டார்கள்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சீன நிறுவனமான Li Ning-இன் விளையாட்டு உடையை அணியமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சீன நிறுவனமான Li Ning-இன் விளையாட்டு உடையை அணியமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் உடையில் ஆதரவுச் சின்னம் ஏதும் இருக்காது என்றும் இந்திய ஒலிம்பிக் மன்றம் இன்று தகவல் வெளியிட்டது.

கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் மாண்டனர்.

அதனால் இந்தியர்கள் சீன நிறுவனங்களைத் தவிர்க்கத் தொடங்கினர்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சீன நிறுவனங்களின் உடைகளை அணிந்தால் மக்களிடையே அது அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால் அந்த முடிவை எடுத்ததாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியது.

சீன நிறுவனத்தின் ஆதரவிலான இந்திய வீரர்களின் ஒலிம்பிக் உடை 6 நாள்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அந்த உடை நிராகரிக்கப்பட்டுள்ளது.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்