Images
  • india drought
    படம்: AFP

இந்தியா: வறட்சியால் வாடும் மக்கள்

இந்தியாவின் மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மிக மோசமான வறட்சி நிலவிவருகிறது.

இந்தியாவின் கிட்டத்தட்ட பாதி பகுதிகள் பருவமழைப் பற்றாக்குறை காரணமாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

கிணறுகளில் போதுமான நீர் இல்லை. விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் இல்லை.

கடந்த ஐந்து பருவமழைக் காலங்களில் மூன்று முறை மழைநீர் அளவு மிகக் குறைவாகவே இருந்தது.

இந்த ஆண்டு சற்றுத் தாமதமாக வந்த பருவமழை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.  

Top