Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியப் பொதுத் தேர்தல்: மாபெரும் வெற்றியை ஒட்டி மாபெரும் கொண்டாட்டம்

இந்தியப் பொதுத் தேர்தலில், மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதை ஆளும் பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள் ஆடிப் பாடிக் கொண்டாடி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
இந்தியப் பொதுத் தேர்தல்: மாபெரும் வெற்றியை ஒட்டி மாபெரும் கொண்டாட்டம்

(படம்: AFP / SAJJAD HUSSAIN)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியப் பொதுத் தேர்தலில், மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதை ஆளும் பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள் ஆடிப் பாடிக் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சுமார் 30 ஆண்டுகளில், மத்தியில் ஆளும் கட்சி மறுபடியும் ஆட்சியைப் பிடித்திருப்பது இதுவே முதன்முறை.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, 385 000 (3.85 லட்சம்) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் புதுடில்லியிலுள்ள கட்சித் தலைமையகத்துக்குச் சற்றுமுன்னர் திரு. நரேந்திர மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா, திரு. ராஜ்நாத் சிங், திருமதி சுஷ்மா ஸ்வராஜ்-உள்ளிட்ட தலைவர்கள் சென்றனர். அப்போது அவர்களை மலர்தூவி வரவேற்றனர் தொண்டர்கள்.

இன்னும் சற்றுநேரத்தில் திரு. மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்