Images
  • elex (1)
    படம்: REUTERS 

சட்டமன்றத் தேர்தலுகுப் பிறகு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றம்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுகுப் பிறகு பதற்றம் அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, மேற்கு வங்கத்தில் திருவாட்டி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸிடம் தோல்வியுற்றது.

அந்தக் கட்சியினர், தனது தொண்டர்கள் 11 பேரைக் கொன்றதாகவும், அலுவலகங்களைச் சேதப்படுத்தியதாகவும்
பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டியது.

அதை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ், தனது கட்சித் தொண்டரும் கொல்லப்பட்டதாய்த் தெரிவித்தது.

மாநிலக் காவல்துறையினர், உயிர்சேதம் பற்றிய விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.

தேர்தலுக்குப் பிந்திய வன்முறை பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேற்கு வங்க மாநில அரசாங்கத்துக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

திருவாட்டி மம்தா பானர்ஜி நாளை மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அதையொட்டி, நாளை தேசிய அளவில் வேலை நிறுத்தம் நடத்த பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்ட திருவாட்டி மம்தா பானர்ஜி, பழைய வன்முறை தொடர்பான படங்களை கொண்டு பாரதீய ஜனதா பொய்த் தகவலைப் பரப்பிவருவதாகச் சாடியுள்ளார்.   

Top