Images
  • PM Modi
    (படம்: REUTERS/Altaf Hussain)

இந்தியா வறுமையால் வாடும் மக்களுக்கான இலவச உணவுத் திட்டத்தை நவம்பர் இறுதிவரை நீட்டித்தது

இந்திய அரசாங்கம், வறுமையில் வாடும் சுமார் 800 மில்லியன் மக்களுக்கு உதவும் இலவச உணவு தானியத் திட்டத்தை நவம்பர் இறுதிவரை நீட்டிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இலவச உணவு தானியத் திட்டத்தால் அரசாங்கத்துக்கு, மேலும் சுமார் 12 பில்லியன் டாலர் (900 பில்லியன் ரூபாய்) செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கிய நாடளாவிய முடக்கத்தால், பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் பொருளியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுமாறு குடிமக்களுக்கு ஆற்றிய தேசிய உரையில் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியர்கள் பட்டினியில் வாடக் கூடாது என்னும் நோக்கம் கொண்ட இந்தத் திட்டம் சாத்தியமாக உதவிய விவசாயிகளுக்கு, திரு. மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நேர்மையாக வரி செலுத்துவோருக்கும் அவர் நன்றி கூறினார்.

Top