Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: LG Polymers ஆலை ரசாயனக் கசிவு - 12 பேர் கைது

இந்தியாவின் விசாகப்பட்டின நகரிலுள்ள LG Polymers ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கசிவுச் சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தியா: LG Polymers ஆலை ரசாயனக் கசிவு - 12 பேர் கைது

(கோப்புப் படம்: Reuters/R Narendra)

இந்தியாவின் விசாகப்பட்டின நகரிலுள்ள LG Polymers ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கசிவுச் சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், 2 இயக்குநர்களும் அவர்களில் அடங்குவர்.

கைது நடவடிக்கை நேற்று மாலை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

2 மாதத்திற்கு முன் நடந்த ரசாயனக் கசிவுச் சம்பவத்தில் 12 பேர் மாண்டனர்.

தென் கொரியாவின் LG Chem நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலை அது என்பது விசாரணையில் தெரியவந்தது.

ரசாயனக் கசிவிற்கு ஆலை நிர்வாகத்தின் அலட்சியமும், எச்சரிக்கைக் கட்டமைப்பு சரியாகச் செயல்படாததும் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தத் தொழிற்சாலையைக் குடியிருப்புகள் இல்லாத பகுதிக்கு மாற்றவேண்டும் என்றும் விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்