Images
  • India
    படம்: AFP

இந்திய விவசாயிகள் மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர்

இந்திய விவசாயிகள் இன்று மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் நடந்த அந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நெல், கோதுமை தவிர்த்து மற்ற பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய அரசாங்கம் வேளாண்மைக்காக இயற்றிய புதிய சட்டங்களை சில நாள்களுக்கு முன்னர் மீட்டுக்கொண்டது.

புதுச் சட்டங்களுக்கு எதிராக சுமார் ஓராண்டு காலமாக விவசாயிகள் நடத்தி வந்த அந்தப் போராட்டம் மிகப்பெரும் வெற்றியாகக் காணப்படுகிறது.

சட்டங்களை அரசாங்கம் மீட்டுக்கொண்டாலும் அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும் வரை போராட்டம் தொடரும்
என்று விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் இந்த முடிவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

- Reuters/vc 

Top