Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

செயற்கை நுண்ணறிவின் உதவியோடு மதுரையில் கண் பரிசோதனை

காசு இருக்கிறதோ இல்லையோ, கண் பரிசோதனை வழங்கப்படுமாம் மதுரையின் அரவிந்த் கண் மருத்துவமனையில்....

வாசிப்புநேரம் -
செயற்கை நுண்ணறிவின் உதவியோடு மதுரையில் கண் பரிசோதனை

(படம்:Pixabay)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)


காசு இருக்கிறதோ இல்லையோ, கண் பரிசோதனை வழங்கப்படுமாம் மதுரையின் அரவிந்த் கண் மருத்துவமனையில்....

இந்தியா முழுவதிலிருந்தும் 2,000க்கும் அதிகமான நோயாளிகள், ஒவ்வொரு நாளும் அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வருகின்றனர்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்களே, நோய்க்கான தடயங்களைக் கண்டறிகின்றனர்.

ஆனால், அரவிந்த் கண் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு அது எளிதில் நிறைவேற்றப்படுகிறது.

Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்களின் உதவியோடு அது சாத்தியமாகிறது.

சுமார் 70 மில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயால் அவதியுறுகின்றனர்.அதனால் கண் பார்வையை இழக்கும் அபாயத்தையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

அவர்களுக்கு ஒழுங்கான சிகிச்சை வழங்குவதற்கு இந்தியாவில் போதிய வசதிகளும் மருத்துவர்களும் இல்லை.

ஆகையால், Google நிறுவனம், அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவசமாக அந்த ஆய்வை மேற்கொள்கிறது.

அம்மாதிரியான நோய்களை முன்கூட்டியே கண்டறிவது எளிது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களால் அது சாத்தியமாகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்