Images
  • india floods
    படம்:  AFP/STR

இந்திய வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 184

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியாவில் மழை, வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 184க்கு அதிகரித்துள்ளது.

அதிகாரிகள் சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களைத் தற்காலிக முகாம்கில் தங்கவைத்துள்ளனர்.

கேரளாவில் மோசமான நிலை காணப்படுகிறது.

கொச்சி அனைத்துலக விமானநிலையம் மூனறு நாட்களாக மூடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் குறைந்தது 42 பேர் வெள்ளத்தால் மாண்டனர்.

அண்மை ஆண்டுகளில் அம்மாநிலம் ஆக மோசமான வெள்ளத்தைச் சந்தித்துள்ளது.

உயரும் வெள்ளநீர் மட்டத்தால் முக்கிய நெடுஞ்சாலைகளும் சாலைகளும் சேதமடைந்துள்ளன அல்லது துண்டிக்கப்பட்டுள்ளன.

முத்தரப்புப் படையினரும் அவசரகால அதிகாரிகளும் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 66 என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


Top