Images
  • india (1)
    படம்: AFP

காயமுற்ற தந்தையை சைக்கிளில் வைத்து 1,000 கிலோமீட்டருக்கு மேல் ஓட்டிய 15 வயது இந்தியச் சிறுமி

காயமுற்ற தந்தையை சைக்கிளில் வைத்து ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்த 15 வயது இந்தியச் சிறுமிக்குப் புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

COVID-19 கிருமித்தொற்று காரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் முடக்கப்பட்டது.

அதனால் ஆயிரக்கணக்கான வெளிமாநில ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, என்ன செய்வதென்று தெரியாமல் சாலையில் நடக்கவும், சைக்கிளில் பயணம் செய்யவும் தொடங்கினர்.

15 வயது ஜோதி குமாரியும் அவரது தந்தையும் மற்றவர்களைப் போலவே புதுடில்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் பயணத்தைத் தொடங்கினர்.

ஜோதியின் தந்தைக்குக் காயம் ஏற்பட்டதால் சைக்கிளின் பின் இருக்கையில் உடைமைகளுடன் அவர் அமர்ந்துகொள்ள, ஜோதி சுமார் 1200 கிலோமீட்டர் பயணத்தை ஆரம்பித்தார்.

7 நாள்களில் அவர்கள் இருவரும் வீடு திரும்பினர்.

அந்தச் சம்பவம் இந்திய சைக்கிள் சம்மேளனத்தின் பார்வைக்குச் சென்றது.

அதைத் தொடர்ந்து அவரைச் சோதனை ஓட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜோதிக்கு நல்ல திறமை இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இருப்பினும் ஜோதி படிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜோதியின் பயணத்தைக் கண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மகள் இவான்க்கா
டிரம்ப் Twitter-இல் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
 

Top