Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: Android இயங்கு தளத்தை Google முறைகேடாய்ப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

Google நிறுவனம், பிரபலமான தனது Android கைத் தொலைபேசி இயங்குதளத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, தனது போட்டியாளர்களைத் தடை செய்ததாக இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: Android இயங்கு தளத்தை Google முறைகேடாய்ப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

(படம்: REUTERS/Adnan Abidi/File Photo)

Google நிறுவனம், பிரபலமான தனது Android கைத் தொலைபேசி இயங்குதளத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, தனது போட்டியாளர்களைத் தடை செய்ததாக இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதுகுறித்து, இந்திய ஏகபோக உரிமை எதிர்ப்பு ஆணைக்குழு விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் குழு, அந்தப் புகாரைப் பதிவு செய்தது.

அந்தப் புகார் குறித்து Google நிர்வாகிகள், ஒருமுறை இந்திய அதிகாரிகளைச் சந்தித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Android கருவிகளில் Google தேடுதளம், Chrome உலாவி, Google Play app store முதலியவற்றை முன்கூட்டியே பதிவிறக்கிக் கொள்ள உற்பத்தியாளர்களை Google கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தனது சந்தை ஆதிக்கத்தைப் பயன்படுத்தி, 2011 முதல் Google அவ்வாறு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதுபற்றிக் கருத்துரைக்க Google மறுத்துவிட்டது.

ஏற்கனவே Google நிறுவனத்துக்கு ஐரோப்பாவில் இத்தகைய குற்றத்துக்காக 4.34 பில்லியன் இயூரோ (5 பில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை எதிர்த்து Google மேல்முறையீடு செய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்